/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
/
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
ADDED : அக் 25, 2024 08:53 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
சொர்ணவாரி பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெற் பயிர்களை, 57 நேரடி நெல்கொள்முதல் நிலையம் வாயிலாக, 2308. கோடி கிலோ நெல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 3,115 பேர் பயடைந்துள்ளனர். சம்பா நெற்பயிருக்கு இதுவரை 2,581 பேர் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் தேர்ந்துள்ளனர். தகுதியுள்ள விவசாயிகள் நில விவரம், ஆதார் எண், வங்கி கணக்கு ஆகியவற்றை, பி.எம்.கிசான் இணையதளத்தில் உறுதி செய்ய வேண்டும்.
பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்யாமல் விடுபட்ட விவசாயிகள் மற்றும் கடன் அட்டை பெறாதோர், https://pmkisan.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் முருகன், துணை இயக்குனர்- மாநிலத் திட்டம் வேதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.