/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோளூர் ஏரியில் ஆகாயத்தாமரை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
/
கோளூர் ஏரியில் ஆகாயத்தாமரை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
கோளூர் ஏரியில் ஆகாயத்தாமரை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
கோளூர் ஏரியில் ஆகாயத்தாமரை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ADDED : நவ 10, 2024 02:12 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தில், நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால், ஆண்டுக்கு ஒரு முறை மழையை மட்டுமே நம்பி, சம்பா பருவத்தில் நெல் பயிரிடப்படுகிறது.
விவசாயிகளின் ஒரே நம்பிக்கை இங்குள்ள, நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில், 185 ஏக்கர் பரப்பில் பாசன ஏரி மட்டுமே ஆகும். இதில் தேக்கி வைக்கப்படும் மழைநீரை கொண்டு, 735 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த ஆண்டு நேரடி நெல் விதைப்பு முறையில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையில் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து அதன் கொள்ளவை எட்டி இருக்கிறது. அதே சமயம் ஏரி முழுதும் ஆகாயத்தாமரை சூழ்ந்து உள்ளது. இவற்றால் ஏரியில் தேங்கும் தண்ணீர் மாசடைந்து வருகிறது. ஏரியில் குவாரிவிட்டு மணல், சவுடுமண் அள்ளி மாவட்ட நிர்வாகம், ஏரியை சுத்தப்படுத்தி, பராமரிக்காமல் வைத்திருப்பது விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.