/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் பாழ் பொன்னேரி பகுதி விவசாயிகள் வேதனை
/
காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் பாழ் பொன்னேரி பகுதி விவசாயிகள் வேதனை
காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் பாழ் பொன்னேரி பகுதி விவசாயிகள் வேதனை
காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் பாழ் பொன்னேரி பகுதி விவசாயிகள் வேதனை
ADDED : டிச 22, 2024 01:12 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, கோளூர், ஆவூர், பனப்பாக்கம், மெதுார் உள்ளிட்ட கிராமங்களில சம்பா பருவத்திற்கு நெல் பயிரிடப்பட்டு உள்ளது.
சீரான இடைவெளியில் மழை பொழிவு இருந்ததால், நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் நிலையில், சில தினங்களாக, கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள், அவற்றை சேதப்படுத்தி வருகின்றன.
விளைநிலங்களில் கூட்டமாக புகுந்து, நெற்பயிர்களை கடித்து சேதப்படுத்தி, படுத்து புரள்கின்றன. இதனால், நெற்பயிர்கள் ஆங்காங்கே தரையில் விழுந்து நெல்மணிகள் வீணாகின்றன. காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
இவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்து, வயல் வரப்புகளில் பிளாஸ்டிக் கவர்களை கம்புகளில் கட்டி பறக்கவிட்டு உள்ளனர். காற்றில் படபடக்கும் பிளாஸ்டிக் கவர்களில் இருந்து எழும் சத்தத்திற்கு வராது என எண்ணுகின்றனர்.
ஆனால், அவை இரவு நேரங்களில் அருகில் உள்ள நீர்நிலை மற்றும் புதர் பகுதிகளில் வெளிவந்து நெற்பயிர்களை சேதப்படுத்திவிட்டு செல்கின்றன.
காட்டுப்பன்றிகளின் தொல்லையால், நெற்பயிர்கள் சேதம் அடைந்து, அறுவடையின்போது மகசூல் பாதித்து, வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.
காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் வேளாண்மைத் துறையினர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.