/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகள் ஒற்றுமையாக செயல்படுவது அவசியம்
/
விவசாயிகள் ஒற்றுமையாக செயல்படுவது அவசியம்
ADDED : டிச 21, 2024 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளின், 9 அம்ச கோரிக்கைகளை போராடி பெற்றவர் நாராயணசாமி. இவரது, 40வது நினைவு நாளையொட்டி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் எதிரே நடந்த நிகழ்வில் அவரது படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆஞ்சநேயலு தலைமை வகித்தார். இதில், எல்லாபுரம், பூண்டி ஒன்றிய விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்றனர். இதில் பேசிய முக்கிய பிரமுகர்கள், இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட, 9 அம்ச கோரிக்கைகளை பெற்றுத் தந்தவர் என, புகழாரம் சூட்டினர். விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட என, வலியுறுத்தினர்.