/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்இணைப்பு வழங்க விவசாயிகள் மனு
/
மின்இணைப்பு வழங்க விவசாயிகள் மனு
ADDED : ஜன 10, 2025 01:59 AM
திருத்தணி,
திருத்தணி -- அரக்கோணம் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று, திருவள்ளூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமையில் நடந்தது.
திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் வரவேற்றார். இதில், திருத்தணி கோட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் மின்நுகர்வோர்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
இதில், விவசாயிகள் பங்கேற்று விவசாய கிணறுகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க வேண்டும் என, கோரிக்கை மனு வழங்கினர்.
தொடர்ந்து, மின்நுகர்வோர்கள், விவசாய மின்இணைப்பு பெயர் மாற்றம், அபராத தொகை ரத்து செய்ய வேண்டும், திருத்தணி அக்கைய்யாநாயுடு சாலையில் மின்மாற்றி  அமைக்க வேண்டும் என, மக்கள் மனு கொடுத்தனர்.
தொடர்ந்து, திருத்தணி கரிமேடு பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர், திருத்தணி - அரக்கோணம் சாலை, பழையசென்னை சாலை மற்றும் சித்துார் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் சாலையோரம் உள்ள மரங்களை வெட்டி எடுப்பதற்குநெடுஞ்சாலை துறையின் வாயிலாக டெண்டர் எடுத்துள்ளேன்.
இந்த மரங்கள் வெட்டுவதற்கு இடையூறாக உள்ள 11 கே.வி., மின்ஓயர்களை துண்டிக்க வேண்டும் என, மனு கொடுத்தார்.
மனுக்கள் பெற்ற மின்வாரிய திருவள்ளூர் மேற்பார்வை பொறியாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.
கூட்டத்தில், மின்வாரிய உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

