/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உழவர் உற்பத்தியாளர்கள் பொதுக்குழுக் கூட்டம்
/
உழவர் உற்பத்தியாளர்கள் பொதுக்குழுக் கூட்டம்
ADDED : செப் 28, 2024 07:51 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், அகூர் கிராமத்தில், திருத்தணி கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஆறாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
திருவள்ளூர் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் நா.ஜீவராணி தலைமை வகித்தார். திருத்தணி கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பி.எஸ்.ஆறுமுகம் வரவேற்றார்.
இதில், திருவள்ளூர் வேளாண் வணிகம் மற்றும் வேளாண்மை அலுவலர் முகமதுமுபாரக் பங்கேற்று உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
கூட்டத்தில், 2023- - 24ம் ஆண்டின் தணிக்கை அறிக்கை சமர்பித்தல், 2024- - 25ம் ஆண்டின் வணிக திட்டம் சமர்ப்பித்தல், தணிக்கையாளர் நியமித்தல் மற்றும் நடப்பாண்டின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், வேளாண்மை உதவி அலுவலர்கள் அருண்குமார், இலக்கியா, உறுப்பினர்கள் ராமு, ஜெயராம்ராஜூ. சண்முகம் உட்பட விவசாயிகள் என, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருத்தணி கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் இயக்குனர் தனபால் நன்றி கூறினார்.