/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆறு வழிச்சாலை பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு
/
ஆறு வழிச்சாலை பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு
ADDED : ஜன 19, 2024 09:25 PM

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம், சித்துார் வரை, 126 கி.மீ., துாரத்திற்கு. 3,197 கோடி ரூபாய் மதிப்பில் ஆறு வழிச்சாலை அமைக்கும் திட்டப்பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.
ஊத்துக்கோட்டை வட்டம், போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று பணி துவக்க சென்றபோது, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எங்கள் பகுதியில் உள்ள நிலத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு கூடுதலாக கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. எங்கள் நிலத்தில் இருந்த மரம், போர்வெல், பைப் லைன் இழப்பீடு என எந்த தொகையும் வழங்கவில்லை.
இதற்கு முன் கலெக்டராக இருந்த ஆல்பிஜான்வர்கீஸ் கூடுதல் பணம் பெற்று தருவதாக கூறினார். இன்றுவரை வரவில்லை.
எங்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு பணிகளை துவக்குங்கள் என விவசாயிகள் கூறினர்.
ஊத்துக்கோட்டை தாசில்தார் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர். பின் விவசாயிகள் கலைந்து சென்றனர்.