/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இழப்பீட்டு தொகை இழுபறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
இழப்பீட்டு தொகை இழுபறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 29, 2024 01:32 AM
பள்ளிப்பட்டு:திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் முதல் சித்துார் வரை ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, ஒப்பந்தப்படி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியில் உள்ள விவசாயிகள், நேற்று பள்ளிப்பட்டு அஞ்சலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட விவசாயிகள் சங்க துணை செயலர் நந்தகுமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகி ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட நிர்வாகம் அறிவித்த இழப்பீட்டுத் தொகையை வழங்காமல், குறைத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கண்டித்து ஏற்னவே பள்ளிப்பட்டு விவசாயிகள், ஆறுவழி சாலை பணியை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

