/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
/
விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
ADDED : ஜன 12, 2024 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமையில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் நடந்து வருகிறது.
நேற்று கோட்டாட்டசியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் ஆர்.டி.ஓ., தீபா தலைமையில் நடந்தது.
இதில் குறைந்த எண்ணிக்கையிலான ஆறு விவசாயிகள் மட்டுமே பங்கேற்றனர். விவசாயிகள் அதிகளவில் பங்கேற்காததால், கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை குறித்து அதிகாரிகள் கூறினர். 15ம் தேதி பொங்கல் பண்டிகை என்பதால், விவசாயிகள் குறைந்த அளவில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.