/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போலீசாருக்கு ஆதரவாக உண்ணாவிரதம்
/
போலீசாருக்கு ஆதரவாக உண்ணாவிரதம்
ADDED : ஜன 07, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே சுண்ணாம்புகுளம் கிராமத்தில் வசிப்பவர் மதன்குமார், 42. டெய்லர். நேற்று காலை சுண்ணாம்புகுளம் கிராமத்தில், பந்தல் அமைத்து, போலீசாருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
உண்ணாவிரதம் குறித்து அவர் கூறியதாவது:
போலீசாருக்கு, 8 மணி நேர வேலை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். குற்றவாளிகளுடன் நேரம் செலவிடும் போலீசார், குடும்பத்தினர் உடனும் நேரம் செலவிட வழி வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தகவல் அறிந்து ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று சமாதானம் பேசி அனுப்பி வைத்தார்.