/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேன் -- பைக் மோதல் மகளுடன் தந்தை பலி
/
வேன் -- பைக் மோதல் மகளுடன் தந்தை பலி
ADDED : ஜன 05, 2025 08:14 PM
திருவாலங்காடு:ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், விஜயபுரம் ஒன்றியம், பாதர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கையன், 30; கூலி தொழிலாளி.
இவர். பாதர்காடு கிராமத்தில் உள்ள மாத்தம்மன் கோவில் திருவிழாவிற்கு. பூஜை பொருட்கள் வாங்க. நேற்றுமுன்தினம் மாலை, ரம்யா 25, மகள்கள் பூர்ணிமா 6, மோக்ஷிதா 3, ஆகியோருடன், 'ஹீரோ ஸ்பிளன்டர்' இருசக்கர வாகனத்தில், கனகம்மாசத்திரம் பஜாருக்கு சென்றார்.
பூஜை பொருட்களை வாங்கிக் கொண்டு சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக, இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
நெடும்பரம் அருகே வந்தபோது, எதிர்திசையில் வந்த, 'எய்ச்சர்' சரக்கு வேன், இருசக்கர வாகனம் மீது மோதியதில், மோக்ஷிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கனகம்மாசத்திரம் போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த அங்கையன், ரம்யா, பூர்ணிமா ஆகிய மூன்று பேரையும் மீட்ட கனகம்மாசத்திரம் போலீசார், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலையில் படுகாயமடைந்த அங்கையன், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று மதியம், உயிரிழந்தார்.
கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

