ADDED : செப் 16, 2026 08:14 PM
அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை, செப். 17–
வேலைக்குச் சென்ற மகளை காணவில்லை என, அவரது தந்தை அளித்த புகாரின்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வெங்கல் அடுத்த கோயம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன். இவரது மகள் பிரதீபா, 21. தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 13ம் தேதி, வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற பிரதீபா, அதன்பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும், அவர் குறித்தான எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, தேவன் அளித்த புகாரின்படி, வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து, காணாமல் போன பிரதீபாவை தேடி வருகின்றனர்.
