/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆற்றில் மகனுக்கு நீச்சல் கற்று தந்த தந்தை பலி
/
ஆற்றில் மகனுக்கு நீச்சல் கற்று தந்த தந்தை பலி
ADDED : டிச 09, 2024 02:26 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், குப்பம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி, 35; பெயிண்டர். நேற்று, பள்ளி விடுமுறை என்பதால், தன் 6 வயது மகன் ரித்திஷுக்கு நீச்சல் கற்றுத்தர வீட்டின் அருகில் உள்ள கொசஸ்தலை ஆற்றுக்கு அழைத்துச் சென்றார்.
ஆற்றில் மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தப்போது எதிர்பாராதவிதமாக தந்தை, மகன் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகே கால்நடை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து ஆற்றில் தத்தளித்த ரித்திஷை மீட்டனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பூபதியை தேடியும் கிடைக்கவில்லை. திருவாலங்காடு போலீஸ் நிலையத்திற்கும், பேரம்பாக்கம் தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பேரம்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் வந்து, ஒரு மணி நேரம் போராடி, பூபதி உடலை, ஆற்றில் இருந்து மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பூபதி உடலை, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.