/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மூடுவிழா கண்ட காவல் நிலையத்தில் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் பீதி
/
மூடுவிழா கண்ட காவல் நிலையத்தில் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் பீதி
மூடுவிழா கண்ட காவல் நிலையத்தில் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் பீதி
மூடுவிழா கண்ட காவல் நிலையத்தில் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் பீதி
ADDED : ஜூலை 10, 2025 02:36 AM

திருவாலங்காடு:பத்தாண்டுகளுக்கு முன் மூடுவிழா கண்ட காவல் நிலையம், விஷ ஜந்துக்கள் மற்றும் சமூக விரோத செயலின் கூடாரமாக மாறியுள்ளதால், கட்டடத்தை அகற்ற வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருத்தணி காவல் கோட்டத்தில் கனகம்மாசத்திரம் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள பஜார் பகுதியில், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காவல் நிலைய கட்டடம், 2010ம் ஆண்டு பழுதடைந்தது.
இதன் காரணமாக, 2014ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி புதிய காவல் நிலையம் கட்டப்பட்டது. புதிய காவல் நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பின்னும், பழைய கட்டடம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இடித்து அகற்றப்படாமல் உள்ளது.
தற்போது, இந்த கட்டடம் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் தங்குமிடமாக மாறி உள்ளது.
மேலும், சமூக விரோதிகள் மது அருந்தவும், கஞ்சா புகைக்கவும் கட்டடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, பாழடைந்த காவல் நிலைய கட்டடத்தை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.