/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேல்நிலை குடிநீர் தொட்டியில் கான்கிரீட் பூச்சு விழுவதால் அச்சம்
/
மேல்நிலை குடிநீர் தொட்டியில் கான்கிரீட் பூச்சு விழுவதால் அச்சம்
மேல்நிலை குடிநீர் தொட்டியில் கான்கிரீட் பூச்சு விழுவதால் அச்சம்
மேல்நிலை குடிநீர் தொட்டியில் கான்கிரீட் பூச்சு விழுவதால் அச்சம்
ADDED : நவ 19, 2025 01:32 AM

ஊத்துக்கோட்டை: கான்கிரீட் பூச்சு பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டி, எப்போது விழுமோ என்ற அச்சத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளனர்.
பூண்டி ஒன்றியம் வேளகாபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கின்றனர்.
இப்பள்ளி வளாகத்தில், 30,000 கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2012 - 13ம் ஆண்டு கட்டப்பட்டது. கட்டி முடித்து, 12 ஆண்டுகளான நிலையில், நீர்த்தேக்க தொட்டியின் துாண்களில் உள்ள கான்கிரீட் பூச்சு பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது.
இதில் சேகரிக்கப்படும் தண்ணீர், அப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனே நடவடிக்கை எடுத்து, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், வேளகாபுரம் கிராமத்தில் உள்ள சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

