/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண் எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் /;சூதாட்ட கும்பல் 4 பேர் கைது
/
பெண் எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் /;சூதாட்ட கும்பல் 4 பேர் கைது
பெண் எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் /;சூதாட்ட கும்பல் 4 பேர் கைது
பெண் எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் /;சூதாட்ட கும்பல் 4 பேர் கைது
ADDED : டிச 08, 2025 06:23 AM
ஆர்.கே.பேட்டை: சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்ய சென்ற பெண் எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த வேணுகோபாலபுரம் ஏரிக்கரையில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, எஸ்.ஐ., ராக்கி குமாரி, சம்பவ இடத்திற்கு சென்றார். சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், எஸ்.ஐ., ராக்கிகுமாரி மீது கற்களை வீசி கொலை மிரட்டல் விடுத்தனர். எஸ்.ஐ., ராக்கிகுமாரி, அந்த கும்பலை கைது செய்தார். அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு, 4 லட்சம் ரூபாய், ஐந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆறு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆந்திர மாநிலம் சித்துாரை சேர்ந்த குமார்ராஜா, 44, தயாநந்தா, 55, நவீன்குமார், 28, சுரேஷ்குமார், 42, என தெரியவந்தது. நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.