நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தக்கோலம்:ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கமல். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முனீராபானு 33. தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது முனீராபானு மின் விசிறியில் துணியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த தக்கோலம் போலீசார் உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.