/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லட்சுமாபுரத்தில் உற்சவர்கள் சந்திப்பு விழா
/
லட்சுமாபுரத்தில் உற்சவர்கள் சந்திப்பு விழா
ADDED : ஜன 16, 2025 08:23 PM
திருத்தணி:திருத்தணி அடுத்த, லட்சுமாபுரம் பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில், ஆண்டுதோறும் காணும்பொங்கல் விழா தினத்தன்று லட்சுமாபுரம், சொட்டநத்தம் மற்றும் தாசிரெட்டிகண்டிகை ஆகிய மூன்று கிராமத்தில் இருந்து உற்சவர்கள், லட்சுமாபுரம் பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
அந்த வகையில், காணும் பொங்கல் விழாவையொட்டி மேற்கண்ட மூன்று கிராமங்களில் இருந்து நேற்று இரவு உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் ஆற்றில் எழுந்தருளினார்.
அப்போது உற்சவர்கள் சந்திப்பின் போது, வாண வேடிக்கையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், மேற்கண்ட கிராம மக்கள் மற்றும் திருத்தணி பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.
பின், உற்சவர் அந்தந்த கிராமத்திற்கு சென்று, வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.