தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குறைவான பேருந்துகள் இயக்கம் மாணவர்கள், பயணியர் அவதி

 குறைவான பேருந்துகள் இயக்கம் மாணவர்கள், பயணியர் அவதி

 குறைவான பேருந்துகள் இயக்கம் மாணவர்கள், பயணியர் அவதி


ADDED : டிச 01, 2025 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 04:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் காலை, மாலை நேரங்களில், அரசு பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுவதால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் பேருந்து பணிமனையில் இருந்து, 50 விரைவு மற்றும் 40 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், விழுப்புரம் கோட்டத்தில் 90 அரசு பேருந்துகளும், 60 மாநகர அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இந்த அனைத்து பேருந்துகளும் காலை, மாலை நேரங்களில் முறையாக இயக்கப்படுவதில்லை. இதனால் மாணவ - மாணவியர் மற்றும் பயணியர், பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்.

சில பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காமல், சிறிது துாரம் தள்ளி சென்று பயணியரை இறக்கிவிட்டு செல்கின்றன. ஆனால், பயணியரை பேருந்தில் ஏற்ற மறுக்கின்றனர்.

திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் வழியாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு க்கு இயக்கப்படும் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்துகளான, தடம் எண்: 160, 82 சி மற்றும் பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் பகுதிக்கு இயக்கப்படும் மாநகர பேருந்துகளான தடம் எண்: 597, 583ஏ உள்ளிட்டவை பள்ளி நேரங்களில் முறையாக இயக்கப்படுவதில்லை.

மேலும், இலவச பஸ் பாஸ் இருந்தும், மாணவ - மாணவியர் ஷேர் ஆட்டோக்களிலும், இருசக்கர வாகனங்களிலும் சென்று வரும் அவலநிலை தொடர்கிறது.

எனவே, திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி, கடம்பத்துார், ஸ்ரீபெரும்புதுார் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவ - மாணவியர் மற்றும் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us