/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின் விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு நிதியுதவி
/
மின் விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு நிதியுதவி
மின் விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு நிதியுதவி
மின் விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு நிதியுதவி
ADDED : பிப் 13, 2025 09:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த பெரிய ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி, 24. இவர், மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார்.
கடந்த மாதம் 24ம் தேதி ராமாபுரம் பகுதியில் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இவரது குடும்பத்தினருக்கு நேற்று அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது. அமைச்சர் காந்தி, ரகுபதியின் பெற்றோரிடம் நேரில் வழங்கினார்.