/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'உங்களை தேடி திட்டம்' ஊத்துக்கோட்டை தேர்வு
/
'உங்களை தேடி திட்டம்' ஊத்துக்கோட்டை தேர்வு
ADDED : ஜன 10, 2025 10:38 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், ''உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில் இம்மாதம் ஊத்துக்கோட்டை தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மக்களை நாடி குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, கலெக்டர் தலைமையிலான அனைத்து துறை அலுவலர்களும், மாதம் ஒரு வட்டத்தில் தங்கி, மக்கள் குறைகளை கேட்டு வருகின்றனர்.
இந்த மாத திட்டத்தின்படி, ஊத்துக்கோட்டையில் வரும் 22ம் தேதி கலெக்டர் தலைமையிலான அனைத்து துறை அலுவலர்களும் முகாமிட தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.