/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின் கசிவால் தீ விபத்து குடிசை வீடு தீக்கிரை
/
மின் கசிவால் தீ விபத்து குடிசை வீடு தீக்கிரை
ADDED : ஜன 19, 2024 10:51 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் கிராமத்தில் குடிசை வீட்டில் வசிப்பவர் குமார், 52. நேற்று காலை மின் கசிவால் அவரது குடிசை வீடு தீ பிடித்தது.
வீட்டில் இருந்த அனைவரும் வெளியே நின்றுக்கொண்டிருந்தால் தீ பிடித்ததை கவனிக்கவில்லை.
மளமளவென பரவிய தீ, குடிசை முழுதும் பற்றியது. தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினர், தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீ விபத்தில், வீட்டு உபயோக பொருட்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் கருகி நாசமானது.
பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
l திருத்தணி நகராட்சி ஏரிக்கரை கீழ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஜ்ஜி, 50. இவர் நேற்று உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றார்.
இந்நிலையில் பூட்டி இருந்த அஜ்ஜி வீட்டில் உயர் மின்னழுத்தம் காரணமாக பிரிஜ் வெடித்து சிதறியாதக கூறப்படுகிறது.
இதனால் வீடு முழுதும் தீ பற்றி எரியத் துவங்கியது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். வீட்டிலிருந்த 'டிவி' பிரிட்ஜ், ஏர் கூலர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து நாசமாயின. திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.