/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எண்ணுார் அனல்மின் நிலையத்தில் தீ விபத்து
/
எண்ணுார் அனல்மின் நிலையத்தில் தீ விபத்து
ADDED : நவ 13, 2024 09:03 PM
எண்ணுார் அனல்மின் நிலைய நிர்வாக அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாயின.
எர்ணாவூர் பகுதியில், 660 மெகாவாட் எண்ணுார் புதிய அனல்மின் நிலைய விரிவாக்க திட்ட பணிகள், சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இப்பணிகளை மேற்கொள்வற்கான நிர்வாக அலுவலகம், அந்த வளாகத்திலேயே தனி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
நேற்று அதிகாலை, அந்த கட்டடத்தில் இருந்து கரும்புகை வெளியாகியது. எண்ணுார், திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர்.
இருப்பினும், அலுவலகத்தில் இருந்த, கணினிகள், முக்கிய ஆவணங்கள், நாற்காலி, மேஜைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. எண்ணுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.