/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரும்பு ஷட்டர் தொழிற்சாலையில் தீ விபத்து
/
இரும்பு ஷட்டர் தொழிற்சாலையில் தீ விபத்து
ADDED : பிப் 29, 2024 01:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார்:அம்பத்துார் அடுத்த அத்திப்பட்டு பகுதியில், 'டிட்கோ' தட்சிணாமூர்த்தி அண்டு கோ' என்ற தொழிற்சாலை உள்ளது.
நேற்று காலை 10:30 மணி அளவில், தொழிற்சாலையின் ஒரு பகுதியில் மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அங்கு வெயிலின் தாக்கத்தை தடுக்க அமைக்கப்பட்டிருந்த, 'டிட்கோ' தெர்மாகோல்' தடுப்பில் தீப்பிடித்து எரிந்தது.
தொழிற்சாலையின் மற்ற பகுதிகளுக்கும் மளமளவென தீ பரவியது. அங்கிருந்த ஊழியர்கள், உடனே வெளியேறினர். தகவல் அறிந்த அம்பத்துார், ஜெ.ஜெ.நகர், மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்கள், மூன்று மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.
தீயில் மின் இணைப்பு மற்றும் உதிரிபாகங்கள், ஆயில் ஆகியவை எரிந்தன.

