/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டயர் தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்
/
டயர் தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்
டயர் தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்
டயர் தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்
ADDED : ஜூலை 19, 2025 12:54 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே டயர் தொழிற்சாலையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. பத்து மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தை ஒட்டி, புதுப்பேட்டை கிராம எல்லைக்கு உட்பட்ட இடத்தில், 'சென்னை கிரம்ப் இன்டஸ்ட்ரீஸ்' என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, வெளிநாடுகளில் இருந்து பழைய டயர்களை இறக்குமதி செய்து, மறுசுழற்சி செய்து, அதிலிருந்து இரும்பு நுாலிழைகளை பிரித்து எடுக்கின்றனர்.
நேற்று அதிகாலை, இந்த தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கிடங்கில் மின்கசிவு ஏற்பட்டு, டயர் கழிவுகளில் தீப்பற்றியது. நேற்று அதிகாலை மழை பெய்த போதிலும், கட்டுக்கு அடங்காமல் மளமளவென பரவிய தீ, கொளுந்து விட்டு எரிய துவங்கியது.
கும்மிடிப்பூண்டி சிப்காட், கும்மிடிப்பூண்டி மற்றும் தேர்வாய்கண்டிகை சிப்காட் ஆகிய மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அதிகாலை 2:30 - மதியம் 12:30 மணி வரை, தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடினர்.
பத்து மணி நேர போராட்டத்திற்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த விபத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டயர் கழிவுகள் தீயில் கருகி நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.