தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/‘எலெக்ட்ரிக்கல்’ கடையில் தீ விபத்து

‘எலெக்ட்ரிக்கல்’ கடையில் தீ விபத்து

‘எலெக்ட்ரிக்கல்’ கடையில் தீ விபத்து


ADDED : அக் 18, 2026 08:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2026 08:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவரம்: சோழவரம் அருகே மின்சாதன பொருட்கள் விற்பனையகத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி வீணாகின.

சோழவரம் அடுத்த அத்திப்பேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன், 57. இவர், தனது கிராமத்தின் அருகில் உள்ள ஜனப்பன்சத்திரம் பகுதியில், மின்சாதன பொருட்கள் விற்பனையகம் வைத்து உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, விற்பனை முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு 11:00 மணிக்கு, இவரது கடை தீப்பற்றி எரிவதாக தகவல் கிடைத்து, அங்கு சென்று அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார்.

தீயானது, கடையில் இருந்த மின்சாதன பொருட்களுக்கு பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்த பொன்னேரி, செங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் அங்கு விரைந்தனர்.

இரண்டு மணி நேரம் போராடி, தீயை கட்டுப்படுத்தினர். அதற்குள், கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி வீணாகின.

இந்த தீவிபத்து குறித்து, சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us