தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி கோவிலில் தீ விபத்து; பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்

 திருத்தணி கோவிலில் தீ விபத்து; பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்

 திருத்தணி கோவிலில் தீ விபத்து; பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்


ADDED : ஏப் 15, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 04:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பெரும்பாலான பெண் பக்தர்கள், மூலவரை தரிசித்த பின், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற நெய் தீபம் ஏற்றி வழிபடுவர். இதற்காக, கோவில் நிர்வாகம் தேர்வீதியில் வேல் மண்டபம் எதிரே உப்பு, மிளகு விற்பனை செய்யும் கடை அருகே, இரும்பு தகடுகளால் தீபம் ஏற்றுவதற்கு வசதியாக, 'ரேக்' ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த 'ரேக்'கில் பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வர். நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால், ஆயிரக்கணக்கான பெண்கள் நெய் தீபம் ஏற்றியதால், திடீரென அங்கு தீப்பிடித்து எரிந்தது. தீபம் ஏற்றிக் கொண்டிருந்த பெண் பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

இதையடுத்து, மலைக்கோவிலில் இருந்த போலீசார் மற்றும் துாய்மை பணியாளர்கள் 10க்கும் மேற்பட்டோர், வாளி மற்றும் குடங்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி, 20 நிமிடங்களுக்கு பின் தீ பரவுவதை கட்டுப்படுத்தினர். இதில், அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நெய் தீபம் ஏற்றும் இடத்தில் அடிக்கடி இதுபோன்ற தீ விபத்து ஏற்பட்டு வருகிறது, இதை தடுக்க, கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us