/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உணவு தயாரிப்பு கூடத்தில் தீ விபத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

ADDED : நவ 08, 2025 02:16 AM

திருமழிசை: திருமழிசை அருகே தனியார் நிறுவன உணவு தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின.
திருமழிசை அருகே வண்டலுார் - நெமிலிச்சேரி நெடுஞ்சாலையில் வயலாநல்லுார் பகுதியில் அன்னபூர்ணா நிறுவனத்தின் உணவு தயாரிப்பு கூடம் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஸ்ரீபெரும்புதுார் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உணவுகளை தயாரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.
நேற்று காலை உணவு தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
காலை 7:00 மணியளவில் சமையலறையில் உள்ள சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதைக் கண்ட ஊழியர்கள் அலறியபடி வெளியேறினர். சமையலறையில் இருப்பு வைத்திருந்த மளிகை பொருட்களில் தீ பரவி, மளமளவென எரிந்ததால், அப்பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்தது.
தகவல் அறிந்த ஆவடி மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் வந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவு தயாரிப்புக்கான மசாலா பொருட்கள் சேதமாகியிருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து வெள்ளவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.