/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கரும்பு தோட்டத்தில் தீ 5 ஏக்கர் பயிர் நாசம்
/
கரும்பு தோட்டத்தில் தீ 5 ஏக்கர் பயிர் நாசம்
ADDED : ஜன 15, 2024 12:08 AM

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் இலுப்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜெயராமன், 70 மற்றும் நாகபூசணம், 22; விவசாயிகள். இவர்கள், தங்களுக்கு சொந்தமான 7 ஏக்கரில் கரும்பு பயிரிட்டு இருந்தனர்.
தற்போது கரும்புகள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று மதியம் கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ பற்றியவுடன் காற்றின் வேகத்தால் இருவரின் கரும்பு தோட்டத்திலும் தீ பரவியது.
தகவல் அறிந்து வந்த திருத்தணி தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து, மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ பற்ற வைத்தனரா என்பது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் 5 ஏக்கர் கரும்பு பயிர் தீயில் எரிந்து நாசமானது.