தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ உரம் தயாரிக்கும் ஆலையில் பட்டாசு பாக்ஸ் பறிமுதல்

 உரம் தயாரிக்கும் ஆலையில் பட்டாசு பாக்ஸ் பறிமுதல்

 உரம் தயாரிக்கும் ஆலையில் பட்டாசு பாக்ஸ் பறிமுதல்


ADDED : பிப் 21, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாலங்காடு: திருவாலங்காடு அருகே உரம் தயாரிக்கும் ஆலையில் இருந்து, 40 பட்டாசு பாக்ஸை போலீசார் பறிமுதல் செய்து, வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் கிராமத்தில் உரம் தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஆலையில் பட்டாசு உற்பத்தி செய்யப் படுவதாகவும், விற்பனைக்கு வாகனத்தில் அனுப்ப பட்டாசு பாக்ஸ் தயார் நிலையில் உள்ளதாகவும் கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, போலீசார் ஆலையில் சோதனை செய்தனர். அப்போது, தொழிற் சாலை அலுவலக அறையில், 40 பட்டாசு பாக்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்து, திருவாலங்காடு வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து, திருத்தணி வருவாய் துறை அதிகாரி கூறியதாவது:

தீபாவளி பண்டிகையின் போது, சிவகாசியில் இருந்து பட்டாசு பாக்ஸ் வரவழைக்கப்பட்டு, ஆலை ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டது.

மீதமிருந்த பட்டாசு பாக்ஸ் தொழிற்சாலை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்ததாக, ஆலை நிர்வாகம் தரப்பில் கூறப் படுகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us