தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ படகில் இருந்த தவறி விழுந்து மீனவர் மாயம்

படகில் இருந்த தவறி விழுந்து மீனவர் மாயம்

படகில் இருந்த தவறி விழுந்து மீனவர் மாயம்


UPDATED : செப் 30, 2026 10:48 PM

ADDED : செப் 30, 2026 08:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2026 10:48 PM ADDED : செப் 30, 2026 08:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழவேற்காடு:பழவேற்காடில் மீன்பிடிக்க சென்ற மீனவர், கடலில் தவறிவிழுந்து மாயமானதை தொடர்ந்து, அவரை மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

பழவேற்காடு, ஆண்டிகுப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா, 30. மீனவர். இவர், நேற்று முன்தினம், சக மீனவர்களுடன், பைபர் படகு மூலம், கடலில் மீன்பிடிக்க சென்றார்.

நேற்று அதிகாலை, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அலையில் பைபர் படகு ஆடியதால், சூர்யா தவறி கடலில் விழுந்தார்.

சிறிது நேரத்தில் கடல் நீரில் மூழ்கி மாயமானார். சூர்யாவுடன் இருந்த சக மீனவர்கள், அதே பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்வர்களுடன் சேர்ந்து, கடலில் நீண்டநேரம் தேடியும் சூர்யா கிடைக்கவில்லை.

அதையடுத்து, இது குறித்து திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருப்பாலைவனம் போலீசார், மீனவர்கள் உதவியுடன் படகுகளில் சென்று, சூர்யாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us