/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாய்கங்கை கால்வாயில் மீன் பிடிப்பு
/
சாய்கங்கை கால்வாயில் மீன் பிடிப்பு
ADDED : அக் 16, 2024 12:05 AM

ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், சாய்கங்கை கால்வாய் வழியே வந்து கொண்டு இருக்கிறது. ஆந்திர மாநில பகுதிகளில் உள்ள கால்வாய் ஓரங்களில் பெய்து வரும் மழையால், நீர்வரத்து ஏற்பட்டு கிருஷ்ணா நீருடன், மழைநீர் கலந்து வருகிறது.
நேற்று காலை, 6:00 மணி முதல், ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட்டில் வினாடிக்கு, 455.78 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. காலை, 11:00 மணிக்கு மேல் பெய்த பலத்த மழையால், சாய்கங்கை கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கம் பகுதியில் உள்ள கால்வாயில் உள்ளூர் மக்கள் வலை விரித்து மீன் பிடித்து வருகின்றனர். இதில் சிறிய மீன்கள், ஜிலேபி வகை மீன்கள் கிடைப்பதாக அவர்கள் கூறினர்.