/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் 30ம் தேதி கடலில் மீன்பிடிக்க தடை
/
பழவேற்காடில் 30ம் தேதி கடலில் மீன்பிடிக்க தடை
ADDED : ஜூலை 27, 2025 09:03 PM
பழவேற்காடு:ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, நாளை மறுநாள் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதால், அன்றைய தினம் பழவேற்காடு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வங்காள விரிகுடா கடல் பகுதியை ஒட்டி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது.
தி ருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மீனவ கிராமத்தினரும், வங்காள விரிகுடா கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
வழக்கமாக, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் நேரங்களில், மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படுகிறது.
நாளை மறுநாள் சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி.எப்., 16 - நிசார் சாட்டிலைட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
மீனவர்கள் பாதுகாப்பு கருதியும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான சுற்றறிக்கை, அனைத்து மீனவ கிராம நிர்வாகிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.