/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை பொருள் பறிமுதல் ஐந்து பேர் கைது
/
போதை பொருள் பறிமுதல் ஐந்து பேர் கைது
ADDED : அக் 09, 2025 03:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரவாயல்,
மதுரவாயல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அதே பகுதி இமானுவேல், 32, என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த மெத்ஆம்பெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
அவரது தகவலையடுத்து, வடபழனி சஞ்சய், 26, அசோக் நகர் தனுஷ், 26, பர்வேஷ், 19, பிரவீன்குமார், 25, ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து, 1.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 27 கிராம் மெத் ஆம்பெட்டமைன், ஒரு லேப்டாப், ஆறு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.