/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் சிறப்பு தரிசனம் பக்தர்களை ஏமாற்றிய ஐவர் கைது
/
திருத்தணி கோவிலில் சிறப்பு தரிசனம் பக்தர்களை ஏமாற்றிய ஐவர் கைது
திருத்தணி கோவிலில் சிறப்பு தரிசனம் பக்தர்களை ஏமாற்றிய ஐவர் கைது
திருத்தணி கோவிலில் சிறப்பு தரிசனம் பக்தர்களை ஏமாற்றிய ஐவர் கைது
ADDED : மார் 17, 2024 01:20 AM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
மலைக்கோவிலில் சிலர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், சிறப்பு தரிசனத்திற்கு அழைத்து செல்வதற்காக கூறி, 1,000 முதல், 1,500 ரூபாய் வரை பணம் வாங்கிக் கொண்டு, கோவிலுக்குள் அழைத்து செல்கின்றனர். அங்கு சென்று பொது தரிசன வழியில் விட்டு கண்டும் காணாமல் செல்கின்றனர். ஒரு சிலர் பக்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வருவதாகவும் கோவில் நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பில் புகார் தெரிவித்து வந்தனர்.
இதை தொடர்ந்து, கோவில் 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, நான்கு பேர் இதுபோல் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து கோவில் அறநிலைய துறை கண்காளிப்பாளர் வித்யசாகர் அளித்த புகார்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில், திருத்தணி நரசிம்மசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர்கள் பாலு மகன் மதுரை, 48, ராகவன், 36, சுரேஷ், 34, மேல்திருத்தணி அமிர்தாபுரம் காலனியை சேர்ந்த வீராசாமி, 39, மணிவண்ணன், 54 என தெரியவந்தது. போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர்.

