/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சூதாட்டம் ஆடிய ஐவர் கைது பணம், 5 பைக்குகள் பறிமுதல்
/
சூதாட்டம் ஆடிய ஐவர் கைது பணம், 5 பைக்குகள் பறிமுதல்
சூதாட்டம் ஆடிய ஐவர் கைது பணம், 5 பைக்குகள் பறிமுதல்
சூதாட்டம் ஆடிய ஐவர் கைது பணம், 5 பைக்குகள் பறிமுதல்
ADDED : ஜன 05, 2025 08:06 PM
மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, சூதாட்டம் நடைபெறுவதாக மப்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மப்பேடு போலீசார், நேற்று முன்தினம் மாலை அப்பகுதிக்கு சென்றபோது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார், 26, அப்புவேல், 35, ரவி, 38, ராஜேஷ், 35, நாகராஜ், 43, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 52 கார்டுகள், 2,090 ரூபாய் பணம் மற்றும் அவர்கள் ஓட்டி வந்த, 'ஹோண்டா ஷைன், 2 ஹோண்டா யூனிகார், 2 ஆக்டிவா' என, ஐந்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலைய ஜாமினில் விடுதலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.