தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேருக்கு ‘காப்பு’

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேருக்கு ‘காப்பு’

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேருக்கு ‘காப்பு’


ADDED : நவ 04, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்துக்கோட்டை: கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேரை, இன்று (நவ.,4) போலீசார் கைது செய்தனர்.

ஊத்துக்கோட்டை போலீசார், தமிழக – ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம், 100 கிராம் கஞ்சா இருந்தது. அவர், பாலவாக்கம், அன்னை தெரசா நகரைச் சேர்ந்த சதீஷ், 25, என்பது தெரிந்தது.

கன்னிகைபேர் பஜாரில், பெரியபாளையம் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், அதே பகுதியைச் சேர்ந்த சங்கர், 25, என்பவரிடம், 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

கரிக்கலவாக்கம் பேருந்து நிலையம், அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் நடத்திய சோதனையில், கஞ்சா வைத்திருந்த கரிக்கலவாக்கம் ஆகாஷ், 24, அம்மனம்பாக்கம் ஆகாஷ், 24, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், கடம்பத்துார் அடுத்த ஏகாட்டூர் ரயில் நிலையம் அருகே ரோந்து சென்ற கடம்பத்துார் போலீசார், கஞ்சா வைத்திருந்த ஏகாட்டூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 28, என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us