ADDED : பிப் 20, 2025 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி ஏரி பகுதியில் மின்துறை வாயிலாக மின்மாற்றி அமைத்து, அங்கிருந்து விவசாய கிணறுகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருத்தணி மின்வாரிய ஊரக பிரிவு இளநிலை பொறியாளர் கேசவன், 40, என்பவர், மின்மாற்றியை ஆய்வு செய்தபோது அதில் இருந்த 1,500 மீட்டர் அலுமினிய மின்ஓயரை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து, இளநிலை பொறியாளர் கேசவன் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, திருட்டில் ஈடுபட்ட வேலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 39, இளஞ்செழியன், 28, வினோத், 30, வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபு, 32, இந்திரா நகரைச் சேர்ந்த சங்கர், 60, ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

