/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி அருகே கோஷ்டி மோதல் ஐந்து பேருக்கு சரமாரி வெட்டு
/
கும்மிடி அருகே கோஷ்டி மோதல் ஐந்து பேருக்கு சரமாரி வெட்டு
கும்மிடி அருகே கோஷ்டி மோதல் ஐந்து பேருக்கு சரமாரி வெட்டு
கும்மிடி அருகே கோஷ்டி மோதல் ஐந்து பேருக்கு சரமாரி வெட்டு
ADDED : ஜன 13, 2025 01:37 AM
கும்மிடிப்பூண்டி:மாதர்பாக்கம் அருகே, ராமசந்திராபுரம் கிராமத்தில், இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அதன் அருகே உள்ள திடீர் நகரில், திருவொற்றியூர் பகுதியில் இருந்து இடம் மாற்றப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இரு தரப்பைச்f சேர்ந்த சிலருக்கு இடையே நேற்று மாலை, வாக்குவாதம் ஏற்பட்டது. திருவொற்றியூர் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த சிலர், ராமசந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஹரி என்பவரை கத்தியால் கிழித்து தாக்கியுள்ளனர்.
கோபம் கொண்ட ராமசந்திரபுரம் கிராமத்தினர் 10 பேர், தட்டி கேட்க, திருவொற்றியூர் திடீர் நகருக்கு சென்றனர். அங்கு இரு திரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் திருவொற்றியூர் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த சிலர், 10 பேர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில், ராமசந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி, 32, ரவி, 38, வி.வெங்கடேசன், 33, ஜி.வெங்கடேசன், 35, கஸ்துாரிய்யா, 30 ஆகிய ஐந்து பேருக்கு பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது.
ஐந்து பேருக்கும் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் வாயிலாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.