தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கொடி கம்பம் நட்டவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழப்பு

 கொடி கம்பம் நட்டவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழப்பு

 கொடி கம்பம் நட்டவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழப்பு


ADDED : ஜன 12, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கானத்துார்: இ.சி.ஆரில் துணை முதல்வர் உதயநிதியை வரவேற்க, சாலை மையத்தடுப்பில் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுட்ட வாலிபர், மின்சாரம் பாய்ந்து பலியானார்

கோவளம் - -மாமல்லபுரம் இடையே, நேற்று நீச்சல் - சைக்கிள் - ஓட்டம் என்ற 'டிரையத்தலான்' போட்டி நடந்தது.

இதில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றார். இவரை வரவேற்க, கானத்துார், பனையூர் பகுதிகளில் கொடி கம்பங்கள் நடப் பட்டன.

இதற்கான பணியில், நேற்று அதிகாலை, செங்கல்பட்டு, அச்சிறுபாக்கத்தை சேர்ந்த மெய்யப்பன், 29, என்பவர் ஈடுபட்டார். சாலை மைய தடுப்பில் கம்பங்கள் நடும் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராத விதமாக குறுக்கே சென்ற மின் கம்பியில் இரும்பு கம்பம் உரசியது.

அதனால், மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே மெய்யப்பன் பலியானார். கானத்துார் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் உத்தரவையும் மீறி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல், அஜாக்கிரதையாக பணி செய்ய வைத்த ஒப்பந்த நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us