/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசஸ்தலை, நந்தியாறுகளில் வெள்ளம் வருவாய் துறை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
/
கொசஸ்தலை, நந்தியாறுகளில் வெள்ளம் வருவாய் துறை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
கொசஸ்தலை, நந்தியாறுகளில் வெள்ளம் வருவாய் துறை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
கொசஸ்தலை, நந்தியாறுகளில் வெள்ளம் வருவாய் துறை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : டிச 04, 2024 11:25 PM

திருத்தணி, ஆந்திர மாநிலம், நகரி மற்றும் கார்வேட்நகரம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இதனால், ஆந்திர மாநிலம், கார்வேட்நகரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அம்மப்பள்ளி அணை முழு கொள்ளளவு எட்டியும் அதன் உபரி நீர், 1,500 - 2,500 கன அடி நீர் ஷட்டர்கள் வாயிலாக திறந்து கொசஸ்தலை ஆற்றில் விடப்பட்டுள்ளன.
அதே போல, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஏரி நிரம்பி அதன் உபரிநீர் திறந்து விடப்பட்டதால் நந்தியாற்றில் நேற்று முன்தினம் முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், திருத்தணி வருவாய் கோட்டத்தில் கொசஸ்தலை மற்றும் நந்தியாற்றில் வெள்ளம் மற்றும் தரைப்பாலங்கள் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன.
நேற்று, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா கூறியதாவது:
கொசஸ்தலை, நந்தியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றின் ஒரமுள்ள கிராமங்களில் வருவாய் துறையினர் வாயிலாக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, அறிவுறுத்தி வருகிறோம்.
மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள், அந்தந்த கிராமங்களில் தங்கியிருந்து வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன்.
மேலும், தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம் பகுதியில், 24 மணி நேரமும் வருவாய் துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.