/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நந்தியாறு தடுப்பணையில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
/
நந்தியாறு தடுப்பணையில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
நந்தியாறு தடுப்பணையில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
நந்தியாறு தடுப்பணையில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
ADDED : டிச 04, 2024 01:53 AM

திருத்தணி:'பெஞ்சல்' புயலால் திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், மூன்று நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் நந்தியாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஓடத் துவங்கியுள்ளன.
குறிப்பாக, திருத்தணி ஒன்றியம், செருக்கனுார் மதுரா சாமந்திபுரம் கிராமம் அருகே நந்தியாறு செல்கிறது. இந்நிலையில், சோளிங்கர் மற்றும் செருக்கனுார் ஏரிகள் நிரம்பி, அதன் உபரிநீர் நேற்று அதிகாலை முதல், நந்தியாற்றில் கலந்து வெள்ளமாக செல்கிறது.
இதனால், சாமந்திபுரம் அருகே நந்தியாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை முழு கொள்ளளவு எட்டியும் அதிலிருந்து தண்ணீர் வெள்ளமாக ஆற்றில் செல்கிறது.
இதனால் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்வதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நந்தியாறு கோரமங்கலம், திருத்தணி வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.