தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பூச்சி, வண்டுகளுடன் மாவு பாக்கெட்கள் பறிமுதல்

 பூச்சி, வண்டுகளுடன் மாவு பாக்கெட்கள் பறிமுதல்

 பூச்சி, வண்டுகளுடன் மாவு பாக்கெட்கள் பறிமுதல்


ADDED : ஜன 20, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 05:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: திருவள்ளூர் 'கோவை பழமுதிர் நிலையம்' கடையில், கெட்டுப்போன, பூச்சிகள் உள்ள 100 கிலோ மாவு மற்றும் 20 கிலோ பேரிச்சம்பழம் ஆகியவற்றை, உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர், ஜே.என்.சாலையில் கோவை பழமுதிர் சோலை நிலையம் மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர் செயல்பட்டு வருகிறது. அங்கு, பழங்களுடன், கடலை, உளுந்து, ரவை, மைதா, கேழ்வரகு, கோதுமை உள்ளிட்ட மாவு பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவற்றை வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள், அவற்றில் பூச்சி இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு, புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, மாவு உள்ளிட்ட பொருட்களை சோதனை செய்து, பூச்சி, வண்டுகள் இருந்த 110 கிலோ மாவு பொருட்கள் மற்றும், நிறம் மாறிய பேரிச்சம் பழங்களை பறிமுதல் செய்தனர்.

மாதிரிகள் எடுத்துச் சென்றுள்ள நிலையில், பரிசோதனை முடிவு அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us