தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ களமிறங்கியது பறக்கும் படை மாவட்டம் முழுதும் சோதனை

 களமிறங்கியது பறக்கும் படை மாவட்டம் முழுதும் சோதனை

 களமிறங்கியது பறக்கும் படை மாவட்டம் முழுதும் சோதனை


ADDED : மார் 17, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 05:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் குழு - சட்டசபை தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட பறக்கும் படையினர், மாவட்டம் முழுதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல், ஏப்., 23ம் தேதி நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளிலும், தேர்தல் புகார் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு என, 18 குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் நடத்தை விதி, கடந்த 15ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், பறக்கும் படையினர், மாவட்டம் முழுதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 10 தொகுதியிலும், நகர, ஊரக பகுதிகளில், அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், பதாகைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், பூந்தமல்லி சட்டபை தொகுதி தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சார்பில், அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அரசியல் கட்சி கொடி, தலைவர் படம் வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் கொடி, படங்களை அகற்ற வலியுறுத்தினர்.

திருவள்ளூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் விளம்பர பேனர்கள், பயணியர் நிழற்குடையில் தலைவர் படங்கள், அரசு விளம்பரங்கள், தண்ணீர் பந்தல் பகுதியில் அரசியல் கட்சி விளம்பரங்கள், கல்வெட்டுகளில் அரசு விளம்பரங்கள் போன்றவைகள் முறையாக மறைக்கப்படாமல் உள்ளது.

பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட திருமழிசை பேரூராட்சி மற்றும் நேமம், அரண்வாயல் உட்பட பல்வேறு பகுதிகளில் கட்சி கொடிகள் மற்றும் விளம்பரங்கள் அகற்றப்படாமல் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us