ADDED : மார் 28, 2026 06:04 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியில் இரு வேறு இடங்களில் மேற்கொண்ட தேர்தல் பறக்கும் படை சோதனையில், இரண்டு கார்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற, 25.30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், நிலையான தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்று வாகன சோதனை செய்தனர்.
அப்போது, ஆந்திர மாநிலம் நெல்லுாரில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரில், சிராஜ்கான் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற, 23 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
வியாபாரம் தொடர்பாக எடுத்த சென்றதாக கூறப்பட்ட நிலையில், பறிமுதல் செய்த பணத்தை, சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர்.
அப்போ து, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரில், உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற 2.30 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணம், கும்மிடிப்பூண்டி சார் - கருவூலத்தில் ஒ ப்படைக்கப்பட்டது.
