ADDED : மார் 31, 2026 10:04 PM
அ நிறம் | அளவு
கடம்பத்துார்: திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள பிரையாங்குப்பத்தில், திருவள்ளூர் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், நேற்று பகல் 11:35 மணியளவில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியாக 'நிஸான்' காரில் வந்த காக்களூரைச் சேர்ந்த முத்துராமன், உரிய ஆவணமின்றி 2.69 லட்சம் ரூபாய் எடுத்து வந்தது தெரிந்தது. தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை, திருவள்ளூர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.
கடம்பத்துார் இந்தியன் வங்கியில் நகையை அடமானம் வைத்து பணம் கொண்டு வந்ததாக கூறி, செல்போனில் வந்த குறுஞ்செயதியை காண்பித்தார். ஆனால், தேர்தல் அலுவலர் வங்கியிலிருந்து ஆவணங்களை கொண்டு வந்து, பணத்தை பெற்று செல்லும்படி அறிவுறுத்தினார்.
