/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேடந்தாங்கலில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
/
வேடந்தாங்கலில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
ADDED : டிச 20, 2024 12:23 AM

மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு உடையது. இதில், 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது.
தற்போது, 'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த மழை மற்றும் வடகிழக்கு பருவமழையால், ஏரி முழு கொள்ளளவு நிரம்பி, கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வங்க தேசம், பர்மா, இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும், வேடந்தாங்கலுக்கு பறவைகள் வருகின்றன.
தற்போது, கூழைக்கடா, கரண்டிவாயன், நத்தைக்குத்தி நாரை, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட வகைகளில் 25,000க்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளன.
டிச., - ஜன., - பிப்., மாதங்களில் மேலும் அதிக பறவைகள் வரும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.