/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முன்னாள் ஜனாதிபதி பிறந்த நாள் கொண்டாட்டம்
/
முன்னாள் ஜனாதிபதி பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : செப் 06, 2025 01:16 AM

திருத்தணி:திருத்தணி அருகே உள்ள வெங்கடாபுரம் கிராமத்தில் பிறந்து, நாடு போற்றும் கல்வி மேதையாகவும், நம் நாட்டின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். இவர் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, நாடு முழுதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
நேற்று ஆசிரியர் தினத்தை ஒட்டி, ராதாகிருஷ்ணன் பிறந்த வெங்கடாபுரம் கிராமத்தில் அலங்கரிக்கப்பட்ட அவருடைய திருவுருவ படத்திற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் மக்கள் மலர் துாவி, மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல், திருத்தணி காந்தி ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், டாக்டர் ராதாகிருஷ்ணன் முழுஉருவ சிலைக்கு, முன்னாள் எம்.பி., கோ.அரி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.