/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு மேல்நிலை பள்ளிக்கு குடிநீர் தொட்டி கட்டி கொடுத்த முன்னாள் மாணவர்கள்

ADDED : நவ 28, 2025 03:30 AM

திருவாலங்காடு: அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிக்கு குடிநீர் தொட்டி கட்டி கொடுத்தனர்.
திருவாலங்காடில் அரசு மேல்நிலைப் பள்ளி, 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு 850 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் 1986 முதல் 93ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவ - மாணவியர் சந்திப்பு கடந்தாண்டு நடந்தது.
அப்போது, பள்ளியில் போதிய குடிநீர் இன்றி மாணவ - மாணவியர் தவிப்பதும், கட்டடங்கள் பொலிவிழந்து உள்ளதையும் அறிந்தனர்.
இதையடுத்து, ஒரு குழுவாக இணைந்து, தங்கள் பள்ளிக்கு நன்றி செலுத்தும் விதமாக, 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தேக்க தொட்டியை, 1.50 லட்சம் ரூபாயில் சமீபத்தில் கட்டி கொடுத்தனர். மேலும் பள்ளி கட்டடத்திற்கு புதிதாக வண்ணம் பூசினர்.
முன்னாள் மாணவ - மாணவியருக்கு, ஆசிரியர்கள், மாணவ - மாணவியர் நன்றி தெரிவித்தனர்.