/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் நகராட்சி மேல்நிலை பள்ளிக்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல்
/
திருவள்ளூரில் நகராட்சி மேல்நிலை பள்ளிக்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல்
திருவள்ளூரில் நகராட்சி மேல்நிலை பள்ளிக்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல்
திருவள்ளூரில் நகராட்சி மேல்நிலை பள்ளிக்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல்
ADDED : பிப் 09, 2024 09:41 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் ராஜாஜி சாலையில் குறுகலான இடத்தில் இயங்கி வரும், நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு தீர்வு காணும் வகையில், புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜே.என்.சாலை தாலுகா அலுவலகம் அருகில், 50 சென்ட் இடத்தில், 6 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கு, நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
புதிய பள்ளி கட்டடம் கட்ட, நகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டதில், கடந்த மாதம், ஜே.என்.சாலை, தாலுகா அலுவலகம் அருகில், சமீபத்தில் மீட்கப்பட்ட அரசு நிலம் 50 சென்ட் இடத்தில், புதிய பள்ளி கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியும் பெறப்பட்ட நிலையில், நேற்று இங்கு, கட்டட பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன், நகர் மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன், கமிஷனர் சுபாஷிணி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
இதுகுறித்து நகர் மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் கூறியதாவது:
ராஜாஜி சாலையில் செயல்படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் மட்டும், 600 பேர் பயில்கின்றனர். ஜே.என்.சாலையில், தரை, முதல் மற்றும் 2ம் தளம் என, மூன்று அடுக்கு கட்டடம், 6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளது.
இதற்காக, தொகுதி எம்.எல்.ஏ., நிதியில் 50 லட்சம், நகராட்சி கல்வி நிதியில் 75 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள தொகையை அரசிடம் கேட்டுள்ளோம்.
புதிதாக அமையவுள்ள பள்ளியில், மாணவ - மாணவியருக்கு விசாலமான வகுப்பறை, ஆய்வகம், நுாலகம் மற்றும் விளையாட்டு திடல் ஆகிய வசதிகள் இடம் பெறும்.
தரை தளம் -7,500 ச.அடி, முதல் தளம் -7,500 ச.அடி, இரண்டாம் தளம் - 7,500 ச.அடி, படிக்கட்டு தரை -350 ச.அடி கட்டப்படவுள்ளது. கட்டுமான பணி துவங்கி, ஓராண்டிற்குள் பணி முடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.